Tuesday, September 09, 2008

The New Car

This is my first attempt at blogging in my native language. I know that this would reduce my total readership to a tenth of the original (ok ok...you did your math right. One tenth of my original readership would come to a fraction less than one). Well read it to see how not to write a blog in Tam.

லதா காலிங் பெல்லை அழுத்திவிட்டு நின்றாள். ஒரு நிமிடத்திற்கு பின் கதவு திறக்கப்பட்டது. ரம்யா கதவின் மறுமுனையிலிருந்து புன்னகைத்தாள். "வா லதா. என்ன அங்கேயே நின்னிட்ட. உள்ள வா", என்றவள் சட்டென்று உள்ளே சென்று மின்விசிறியை ஓட விட்டாள். "என்ன ரெண்டு நாளா இந்த பக்கமே காணோம்"?

"இல்ல நேத்து இன்னொரு புதூ கார் வந்துது. அதான்..." என்று இழுத்தாள் லதா. "அடி சக்க. உன் புருஷன் பெரிய ஆளு தான் டீ. ஊருக்கு வந்து ஆறு மாசத்துல மூனாவது புதூ கார். Super போ".

"ஏதோ ஆண்டவன் புண்யம் அக்கா. இந்தாங்க கொஞ்சம் சக்கர பொங்கல் செய்தேன்" என்று அவளிடம் கொண்டு வந்த பாத்திரத்தை நீட்டினாள். "ரொம்ப சந்தோஷம். இனிமே குழைந்தைங்க பள்ளிக்கூடம் போவது கொஞ்சம் எளிதாகும், இல்ல?" கேட்டுக்கொண்டே பொங்கலை தன் வாயில் கொஞ்சம் போட்டு கொண்டால்.

"நிச்சயமா. இன்னும் இருநூறு ரூபாய். நெறையா செய்யலாம். ஒரு கார் அதிகமா தொடைக்க எவ்வளோ நேரம் ஆகா போவுது? ஏதோ அந்த colony-ல இந்த மாதிரி இன்னும் நாலு பேரு கார் வாங்கினா அவங்களுக்கு புண்ணியமா போகும்". அவள் குரலில் ஆவலுடன் ஒரு அவலமும் தெரிந்தது.

No comments: